
முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலையில் புரதாண காலங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவம்சத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும், வடமாகாணத்தில் அதிகளவிலான நிலப்பரப்பினை குருந்தூர் மலை விகாரை கொன்டுள்ளதாகவும் மற்றும் விகாரைக்கு சொந்தமான காணியில் பௌத்த மதத்தினை அடையாளப்படுத்தும் சின்னம்கள் காணப்படுவதாகவும், எனவே குருந்தூர்மலை இந்து கோவிலுக்கு உரித்தானது என்பதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என மெதகொட தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போது நடைபெற்று வரும் விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு தமிழ் அரசியல்கைதிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை வண்மையாக கண்டிப்பதாகவும், வெளிநாடுகளிலுள்ள புலன்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல் கைதிகள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார். எனவே இவர்களின் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.