
நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
மாடல் அழகியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. நல்ல உப்பிய குலாப் ஜாம் போன்று கொழுக் மொழுக் அழகை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இவர் 2018-ல் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர்.
அதைதொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அதன் மூலம் அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.
பின்னர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே அட்டர் பிளாப் ஆகி பெயரை கெடுத்து மார்க்கெட் இழக்க செய்தது. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய தர்ஷா எப்போதும் கிளாமர் வீடியோ போட்டோ வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் வைத்திருப்பார். ஆனால் தற்போது அடக்கமாக பாவடை தாவணியில் பவ்யமாக எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
இதோ அந்த வீடியோ:



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்