உமாச்சந்திரா கைது!!!

உமாச்சந்திரா

முன்னால் ஜனாதிபதிக்கு எதீராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்டதற்காக ஏற்கனவே கைதாகி உடனே விடுவிக்கப்பட்டு இருந்த ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் மீண்டும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்ட இவருடன் சேர்த்து 11 பேருக்கும் தனித்தனியே வழக்குப் பதிவுசெய்து சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். இதனடிப்படையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையுறு விளைவித்தமை மற்றும் பலவந்தமாக காயங்களை ஏற்ப்படுத்தியமை தொடர்பில் உமாச்சந்திரா மீது குற்றப்பத்திரிக்கை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டதனையடுத்து, உமாச்சந்திரா பிரகாஷ் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார் இந்நிலையில் அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Posts