
திருநங்கை தோழி மிலாவுடன் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
சிவகார்த்திகேயனுக்கு லாட்டரி அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு. அந்த படத்தில் ஹீரோயின் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்து சிவகார்த்திகேயனை டைமிங்கில் கலாய்த்திருப்பார்.
அதுமட்டுமல்லாது சூரிக்கு ஜோடியாக நடித்து செம காமெடி செய்தார். இதன்பின் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து, இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவரது நெருங்கிய தோழியான திருநங்கை மிலாவை தனது குடும்பத்தினருடன் சந்தித்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மிலா நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது.







Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்