கொழும்பு…. முகக்கவசம் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!!!

முகக்கவசம்

பானந்துறை வாலான பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து கத்தியினை காட்டி வீட்டில் இருந்த பெண்னை மிரட்டி ஏழு இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச்சென்ற சந்தேகநபரினை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் முகத்தை மழுமையாக மறைக்கும் முகக் கவசம் அணிந்து வீடுகளுக்குள் சென்று கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், வத்தளைப் பிரதேசத்தினைச் சேர்ந்த 42 வயதுடைய சூட்டி என்பவராவார். இவரிடமிருந்து கத்தி, 04 கைத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள், 02 முகக்கவசம் என்பவற்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts