அனைவராலும் செல்லமாக பாப் என்று அழைக்கப்படும் கொரில்லா, சகோதரிகள் இருவருக்கு ஒற்றை விரலை காட்டி நக்கல் அடித்துள்ளது. அமெரிக்காவின் காலராடோ மாநிலத்தில் உள்ள மொண்டானோ விலங்கியல் பூங்காவில் பாப் என்னும் கொரில்லா உள்ளது. இதனைப் பார்க்க பல நூறு பேர் செல்வது வழக்கம். ஆனால் அதில் பலர் குறித்த கொரில்லாவை பார்த்து அடிக்கடி நக்கல் அடிப்பது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் 2 சகோதரிகள் அங்கே சென்று, கொரில்லாவுக்கு முன்னால் நின்று ஏதோ , நக்கல் அடித்துள்ளார்கள். அதனை அவரது அம்மா வீடியோவாக ..
எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். திடீரென சுதாரித்துக் கொண்ட கொரில்லா, ஒற்றை விரலை காட்டி அவர்களை கலாய்த்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கொரில்லாவும் எத்தனை நாள் தான், நக்கலை பொறுத்துக் கொண்டு கூண்டுக் உள்ளே இருப்பது ? அது காட்டிவிட்டது ஒற்றை விரலை. பேசாமல் போங்கள் என்பதே அதன் பொருள். கீழே வீடியோ இணைப்பு.