நாடளாவி ரீதியில் திடீர் சுற்றிவளைப்பு!!!

சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கம்பஹா, மொனராகல மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 24 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தம்வசம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு அமைவாகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொன்டு வருகின்றனர்.

Related Posts