பெங்களூரில் இருந்து கமீலா வந்த விமானத்தின் மூக்கு உடைந்தது- பாதுகாப்பாக தரை இறங்கியது

பிரித்தானிய மன்னர் சார்ளஸின் மனைவி, கமீலா சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் சென்று இருந்தார். அங்கே அவர் இயற்கை மருத்துவ முறையை பின்பற்றி இருந்ததோடு, வைத்தியசாலை சென்று சில உபாதைகளுக்கு சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் நேற்றைய தினம்(27) அன்று பிரித்தானியா திரும்பினார். அவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம், லண்டன் ஹீத் ரு நோக்கி வந்து கொண்டு இருந்தவேளை. அவர் பயணித்த விமானத்தின் மேல் ராட்சச கழுகு ஒன்று மோதியுள்ளது. இதனால் விமானம் ஒரு செக்கன் ஈடாடி, பின்னர் வழமைக்கு திரும்பியது. விமானம்..

ஈடாடினாலும் ஒரு வழியாக, பாதுகாப்பாக வந்து ஹீத் ரூ விமான நிலையத்தில் தரை இறங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுளது. விமானத்தின் மூக்கு உடைந்துள்ளது. சிறிய பறவை என்றாலும், விமானம் பறக்கும் வேகம் காரணமாக அது சிறிய பொருளுடன் மோதினால் கூட, பின் விளைவுகள் பலமாக இருக்கும்.

Related Posts