
மக்களைக் குழப்பி, பிரச்சிணையினை விரிவுபடுத்தி அவர்களை திசை திருப்ப முடியாத விடயங்களை செய்வதனால், நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களுக்கு தீர்வு காண முடியாது என முன்னால் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் களுத்துறையில் இருந்து தொடங்கிய மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தற்பொழுது புத்தளத்தில் அமோக வரவேற்ப்பு மக்கள் மத்தியில் கிடைக்கிடைத்துள்ளது. எனவே எந்த சமயத்திலும் நாங்கள் நாடு தொடர்பில் தவறான தீர்மாணத்தினை மேற்கொள்ள வில்லை, இனிமேலும் மேற்கொள்ள மாட்டோம், நாம் கொரனாவினை ஒழிப்பதற்கு முன்னுரிமையளித்ததன் காரணமான அதனைத் தொடர்ந்து உருவாகிய பொருளாதார நேருக்கடி எமக்கு சவாலாகவே இருந்தது எனவும் தெரவித்தார்.