
இந்தியாவின் டெல்லியில் இருந்து பாங்களூர் செல்ல இருந்த விமானத்தில் 184 பயணிகள் இருந்தார்கள். விமானம் ஓடுபாதையில் ஓடி பறப்பில் ஈடுபட தயாரான நேரம், திடீரென அதன் எஞ்சினில் தீ பற்றிக் கொண்டது. அது மட்டும் அல்ல எஞ்சினின் சில துண்டுகள் வெடித்தும் சிதறியது. இதனை அடுத்து பயணிகள் பெரும் பதற்றத்தில் இருந்தார்கள். விமானிகள் ஒரு வழியாக, விமானத்தை பறக்க விடாமல் அப்படியே நிறுத்தி விட்டார்கள்.
இந்த விமானம் எப்படி தீ பற்றியது என்பது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கீழே வீடியோ இணைப்பு.
Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்