களை கட்டும் லைக்கா தயாரிப்பு- சின்ன கதா பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜனி காந்த்…

ரஜனி

தற்போது ரஜனி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்குப் பின்னர், லைக்கா தயாரிக்கும் 2 திரைப்படங்களில் நடிக்க ரஜனி ஒப்புகொண்டுள்ளார். இதேவேளை அவரது மகள் ஐஸ்வர்யா நடிகர் அதர்வாவை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தையும் லைக்கா தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில். குறித்த படத்தில் ஒரு சிறு வேடத்தில் வர ரஜனி சம்மதித்துள்ளார் என லைக்கா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

லைக்கா நிறுவனம் தொடர்ச்சியாக பெரும் பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றி பெற்று வருகிறது. ரெட் ஜயன்ட் மூவிசுடன் இணைந்து, இந்தியன் 2 படத்தையும் லைக்கா தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Related Posts