
2006 ஆம் ஆண்டு கொழும்பு பித்தளைச் சந்தியில் முன்னால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் காரணமாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கொழும்பு மெகசின் சிறையில் உள்ள பொறியிலாளரான சிவலிங்கம் ஆருரன் என்பவருக்கு அவர் சிறையிலிருந்து கொன்டு எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் நாவலுக்கான அரச சாஹித்திய விருதும் இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் இவர் இவ்வருடம் எழுதிய தமிழ் நாவலுக்கு “அரச இலக்கிய” விருதினை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இருந்து பெற்றுக்கொன்டார்.