
நாட்டில் தற்போதய அரசாங்கமானது அனைத்து தரப்புக்களையும் கைகோர்த்து செயற்படுவதற்கான ஆர்வத்தினை கொன்டுள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தினை அணைத்து தமிழ் கட்ச்சிகளும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறுகிய நலன்களையும், தேர்தல் பற்றிய கோட்பாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் மக்களுக்கு சிறந்த பிரதிபலனை பெற்றுக் கொடுக்கும் முகமாக ஒன்றினைந்து செயற்பட்ட ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதாவது, அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தினை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தரப்புக்கள் ஒன்றினைய வேண்டும் எனவும், கடந்த காலங்களில் கிடைக்கவிருந்த சந்தர்ப்பங்களை நழுவவிட்டதைப்போன்று அல்லாது தற்போதைய அரசியல் சூழலை சரியாக பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.