பிரான்சில் இருந்து வந்த 20 வயது இளைஞர் 15 வயது பெண்ணை திருமணம் முடித்து தப்பித்தார்கள்..

யாழ் அச்சுவேலிப் பகுதியில், தனது 15 வயது மகளை காணவில்லை என்று பெற்றோர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை செய்து இருந்தார்கள். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த தமிழ் இளைஞர் ஒருவர் குறித்த 15 வயதுப் பெண்ணோடு பேஸ் புக் ஊடாக தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் இது காதலாக மாறிவிட்டது. இன் நிலையில் திடீரென பிரான்சில் இருந்து யாழ் வந்த 20 வயது இளைஞர். 15 வயதுப் பெண்ணை, திருமணம் முடித்து, கூட்டிச் சென்று குடும்பம் நடத்தி உள்ளார். பல முறை உறவு கொண்டும் உள்ளார். இதேவேளை, பொலிசார் இதனைக் கண்டு பிடித்து இருவரையும் கைது செய்துள்ளார்கள்.

குறித்த சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Related Posts