
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்த வண்ணமே காணப்படுவதாகவும், இதற்கு மிகப் பிரதான காரணம் நிலத்தடி நீரில் காணப்படும் அதிகரித்த கல்சியம் மற்றும் பார உலோகங்கள் என்றும் சுகாதார தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
அதாவது, கடந்த ஆண்டில் மாத்திரம் புள்ளிவிபரவியல் தரவுகளின்படி 784 பேர் சிறுநீரக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இப்பிரதேச மக்களை சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்பதற்காக சுத்தமான குடிநீரினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார தரப்பு வேண்டியுள்ளது.