
யாழ்ப்பானம் கல்லியங்காட்டுப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த 21 வயதுடைய இளைஞர் 15 வயது சிறுமியினை திருமணம் செய்து குடும்பம் நடத்தியமைக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் குறித்த சிறுமி அவருடைய பெற்றோரின் பாதுகாப்பில் இருந்ததாகவும், உறவுக்கார பெண் என்பதனால் அவரை காதலித்து பெற்றோரிடம் இருந்து கூட்டிச்சென்று தனியாக குடும்பம் நடத்தியமைக்காக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞரை மல்லாகம் நீதவான் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.