தலைமறைவாக இருந்த பிரதான சூத்திரதாரி கைது!!!

கடந்த வருடம் கோண்டாவில் பகுதியில் கலையகம் ஒன்றினை தீ வைத்து கொழுத்தியதுடன் அங்கிருந்த ஆறு நபர்களை வெட்டிக் காயப்படுத்தியதுடன் வாகனம் ஒன்றினையும் சேதப்படுத்தியதுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுமார் ஒரு வருடத்திற்குமேல் தலைமறைவாக இருந்த நிலையில் இனுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட புலணாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணையினை முன்னேடுத்துள்ளனர்.

Related Posts