பெண் அதிபர் கன்னத்தில் அறைந்து செவிப் பறையை கிழித்தார்- சிறுவன் இவன் தான்

கிளிநொச்சியில் தரம் 8 பயின்று வந்த மாணவன் ஒருவனை, பெண் அதிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவரது தாக்குதலின் வேகம் காரணமாக சிறுவனின் செவிப் பறை கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்க காது தற்போது கேட்கவில்லை என்று சிறுவன் கூறியதால். அவனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

கடந்த சனிக்கிழமை, ஒலி பெருக்கி மூலம் சிறுவனின் பெயரை, உரைத்த பெண் அதிபர். அந்த மாணவனை அழைத்து, சிறுவர் இல்ல பஸ்சில் இனி நீ வரக் கூடாது என்று கடுமையாக கூறி, அனைத்து மாணவர் முன் நிலையில் வைத்து, கண்ணத்தில் அறைந்துள்ளார்.

இதனை பல மாணவர்கள் நேரில் பார்த்துள்ளார்கள். மாணவன் வலி தாங்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளான். குறித்த தலைமை ஆசிரியர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பார்களா ?

Related Posts