
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இலங்கையைச் சேர்ந்த 12 நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து கொன்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், மேற்படி வியாபாரத்தில் ஈடுபடுவோரில் சிலர் கம்பஹா மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை வெகு விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.