100 மைல் கார் ஓடி வந்து DOVER இமிகிரேஷன் நிலையத்தில் குண்டை வீசிய அகதி… லண்டனில்

சுமார் 100 மைல் கார் ஓடி வந்து, டோவரில் உள்ள இமிகிரேஷன் நிலையம் மீது பெற்றோல் குண்டை வீசியுள்ளார் ஒரு அகதி. குறித்த நபர் பிரித்தானியா வந்து அகதிகள் அந்தஸ்த்து கோரியுள்ள நிலையில். மன உழைச்சல் காரணமாக தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் திட்டம் தீட்டி உள்ளார் என அறியப்படுகிறது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். நேற்றைய தினம் காரில் டோவருக்கு வந்த இன் நபர், காரில் இருந்தபடியே வீட்டில் செய்யப்பட்ட பெற்றோல் குண்டை நிலையம் மீது வீசி விட்டு.

அங்கிருந்து புறப்பட்டுச் சென்று அருகில் உள்ள BP எரி பொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து தனது காரையும் வெடிக்க வைக்க திட்டம் தீட்டி உள்ளார். அவர் தனது காரை எரித்து தன்னையும் மாய்த்துக் கொள்ள முனைந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில். குண்டை செயல் இழக்கச் செய்யும் பொலிசார் வரவளைக்கப்பட்டதோடு, ஆயுதம் தாங்கிய பொலிசாரும் டோவரில் குவிக்கப்பட்டு உள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

ஏற்கனவே பிரித்தானியாவில் இருந்து அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வரும் நிலையில். பிரான்சில் இருந்து கடல் வழியாக டோவர் வரும் அகதிகளை ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். புகைப்படங்கள் இணைப்பு.

Related Posts