கணவனின் உடலுறுப்புக்களை தானம்மாக வழங்கிய மனைவி!!!

மனைவி

மஹியங்கன பகுதியினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த என்பவர் அலுவலகம் முடிந்து பேரூந்தில் வீடுநோக்கி சென்று கொன்டு இருக்கும்போது தவறுதலாக பேரூந்தில் இருந்து கீழே விழுந்ததனால் கண்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் இதன்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச் சாவடைந்தமையினால் அவரது உடலுறுப்புக்களை தானமாக தருமாறு வைத்தியர்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்ய விரும்புவதாக அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வைத்தியர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரின் உடலுறுப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக கண்டியில் இருந்து பாதுகாப்பாக விமானம் மூலமாக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு கொன்டு செல்லப்பட்டது.

இதன்படி, அவரது இதயம் கொழும்பிலுள்ள நோயாளிக்கும், அவரது கல்லீரல் மற்றும் நுரையீரல் கண்டி வைத்தியசாலையில் உள்ள ஒருவருக்கும் மற்றும் சிறு நீரகங்கள் பதுளை வைத்திய சாலையில் உள்ள இருவருக்கும் பொருத்தப்படவுள்ளது.

Related Posts