
அநுராதபும் கெபித்திகொலாவ பிரதேசத்தின் யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றநிலை உருவாகியதாக பொலிஸார தெரிவித்தனர். இதன்போது அங்கு பிக்கு உட்பட நுறு பேர் கொன்ட கூட்டத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தாக்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடரபில் பிக்கு உட்பட 04 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.